Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கூட்டு குடும்ப பெருமைகளை கிராம மனத்துடன் சொல்லும் மணியார் குடும்பம்- தம்பி ராமைய்யாவின் சீரிய முயற்சி

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட குடும்ப பாங்கான படங்கள் வந்திருக்கின்றன. அந்த வரிசையில் இடம் பெற்றுள்ள படம் தான் மணியார் குடும்பம். தம்பி ராமைய்யா இயக்கம், தயாரிப்பு, இசை, வசனம் என தனது உழைப்பு மொத்தத்தையும் கொட்டியுள்ளார்.

இத்தனை பண்ணியிருக்கும் அவர் படத்தில் நாயகனாக யாரை நடிக்க வைத்திருப்பார், அவரது மகன் உமாபதியை தான். இது இல்லாமல் ஒரு குத்து பாடலுக்கு பிக்பாஸ் யாஷிகா நடனம் ஆடியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரகனி, மேயாத மான் விவேக் பிரசன்னா என பலர் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க குடும்ப உறவுகளின் பெருமைகளை கூறவிருக்கும் இப்படம் ஆகஸ்ட் 3ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக உள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்‌ஷனை அள்ளும் என்றே எதிர்பார்க்க படுகிறது.

இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில் பாட்டி கதை என்ற பெயரில் இப்படத்தின் ஸ்னிக்பீக் நேற்று வெளியானது. தம்பி ராமைய்யாவின் சீரிய முயற்சிக்கு வெற்றியே கிட்டும் என கோலிவுட்டினர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.