Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு எழுதிய சூப்பர் கதை என்னென்னு தெரியுமா?- கார்த்திக் நரேன் சொல்லிட்டாரு

சிம்பு-கார்த்திக் நரேன் இருவரும் கூட்டணி அமைக்க இருப்பது ஏற்கெனவே வந்த விஷயம் தான். அவர்களின் பட வேலைகள் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் சிம்புவுடன் கதை குறித்து பேசிய அந்த நிமிடங்கள் குறித்து கார்த்திக் நரேன் கூறியுள்ளார். அதில் அவர், நான் அவரை 30 நிமிடங்கள் சந்தித்தேன், மிகவும் சுவாரஸ்யமான சந்திப்பு. அவர் விரைவில் இயக்க இருக்கும் சில கதைகளை கூறினார், அது எல்லாம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

ஏன் இன்னும் நீங்கள் இயக்க ஆரம்பிக்கவில்லை என்று கேட்டதற்கு, சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

அவர் எழுதிய சில கதைகள் புதிதாக இருந்தது, விரைவில் எங்களுடைய கூட்டணி படம் தொடங்கும் என்று கூறியுள்ளார்.