Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் அடுத்தப்படம் எப்போது தொடங்குகிறது, யாருடன் கூட்டணி- கசிந்த தகவல்

அஜித் யாருடைய உதவியும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பால் உச்சத்தை தொட்ட ஒரு நடிகர். அவருடைய படங்கள் பற்றி தெரிந்த கொள்ள விரும்பாத ரசிகர்கள் இருப்பார்களா என்ன.

அந்த வகையில் சிவாவுடன் கூட்டணி அமைத்து அஜித் விசுவாசம் என்ற படத்தில் நடிக்கிறார், படமும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் என்கின்றனர்.

இந்த நேரத்தில் அஜித் அடுத்து தீரன் பட புகழ் வினோத்துடன் தான் இணைய இருக்கிறார் என்றும் அப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போது வரும் செய்தி என்னவென்றால் அஜித் அடுத்தப்படத்தின் பூஜை ஜனவரி மாதமே போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்க இருக்கிறதாம்.

ஒரு படத்தை முடித்த உடனே அடுத்தபடமா என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.