Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடைக்குட்டி சிங்கம் எட்டிய மைல் கல், விஜய், அஜித், சிவகார்த்திகேயனை தொடர்ந்து கார்த்தி சாதனை

கார்த்தி நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் கடைக்குட்டி சிங்கம். இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் இப்படம் செம்ம வசூலை வாரி குவித்து வருகின்றது. இப்படம் இன்றுடன் ரூ 50 கோடியை எட்டும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் படங்களே ரூ 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது, மேலும், லாரன்ஸில் காஞ்சனா-2 ரூ 50 கோடி வசூல் செய்தது.

தற்போது கடைக்குட்டி சிங்கம் இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ளது, இதன் மூலம் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் கார்த்தி மெல்ல இணைந்து வருகின்றார்.