Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சலை தொடர்ந்து கமலின் விஸ்வரூபம்-2விற்கு கிடைத்த கௌரவம்

விஜய்யின் மெர்சல் இந்தியாவில் மட்டுமில்லாமல் ஆசியா அளவில் சிறந்த படமாக அறிவிக்கப்பட்ட படம். அட்லீ இயக்கியிருந்த இப்படம் விஜய்க்கு மற்றொரு ப்ளாக்பஸ்டராக அமைந்தது.

இந்த படம் பாரீஸின் லீ கிராண்ட் ரெக்ஸ் தியேட்டரிலும் திரையிடப்பட்டது. ஆனால் இங்கு முதலில் கமலின் விஸ்வரூபம் படம் தான் முதல் தமிழ் படமாக திரையிடப்பட இருந்ததாம். ஆனால் அந்த படம் எதிர்கொண்ட பிரச்சனைகள் காரணமாக கமல் அங்கு வெளியிடவில்லையாம்.

அதனால் அந்த புகழ் அனைத்தும் விஜய்யின் மெர்சல் படத்திற்கு கிடைத்து விட்டது. ஆனாலும் கமல் விடாபிடியாக தனது விஸ்வரூபம்-2வை அங்கு திரையிட உள்ளாராம். இதற்கு முன் அங்கு கபாலி, பாகுபலி-2 ஆகிய படங்கள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.