Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

VFX காட்சிகளுக்கு மட்டும் இத்தனை கோடி செலவாகியுள்ளதா?- அதிர வைக்கும் 2.0 பட அப்டேட்

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்க படு பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது 2.0 படம். ஆடியோ வெளியீடு துபாயில் கோலாகலமாக நடந்ததை பார்த்து நாம் வியந்து போயிருக்கிறோம்.

அடுத்து டிரைலர், டீஸர் வெளியீடு எல்லாம் எப்போது எப்படி இருக்கப்போகிறது என்ற ஆவல் ரசிகர்களிடம் உள்ளது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி படத்தின் டீஸர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் படத்தில் இடம்பெறும் VFX காட்சிகளுக்கு மட்டும் லைகா நிறுவனம் ரூ. 225 கோடி செலவழித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. ஒவ்வொரு விஷயத்திலும் படத்தின் விஷயங்களும், பட்ஜெட்டும் மக்களை வாய் பிளக்க வைத்து வருகிறது.