Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா? தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு சர்கார் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது செம்ம எதிர்ப்பார்ப்பு நிலவி வருகின்றது.

இந்நிலையில் எப்படியும் இப்படத்தின் வியாபாரம் ரூ 100 கோடி வரை இருக்கும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றது.

இதில் கேரளாவில் எப்போதும் விஜய் படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பு இருக்கும், கடைசியாக வந்த மெர்சல் கூட ரூ 22 கோடி வரை அங்கு வசூல் செய்து சாதனை படைத்தது.

ரூ 10 கோடி வரை ஷேர் மட்டுமே கிடைத்ததாக கூறப்படுகின்றது, இப்படியிருக்க சர்கார் படத்தை ரூ 11 கோடிக்கு வாங்க பல நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றதாம்.

விஜய் படம் எப்படியும் போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என பலரும் முயற்சி செய்து வருகின்றனர், மேலும் ரூ 11 கோடி என்பது தொடக்க விலையே, இவை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இதன் மூலம் கேரளாவில் தமிழ் சினிமா வியாபாரம் அடுத்தக்கட்டத்தை எடுத்து வைத்துள்ளது நன்றாக தெரிகின்றது.