Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் படம் இல்லை, விஜய் படம் மட்டுமே செய்த முதல் சாதனை- மெர்சல் ரசிகர்களை மெர்சலாக்குறது பா

அஜித்-விஜய் இருவருக்குள்ளும் போட்டி இல்லை ஆனால் அவரது ரசிகர்கள் டுவிட்டரில் அப்படி ஒரு சண்டை போடுவார்கள்.

கடந்த வருடம் வெளியாகி தமிழ் சினிமா படங்களின் வசூலில் மாஸ் படைத்த படம் விஜய்யின் மெர்சல். இப்படம் இப்போதும் பல விருது விழாக்களிலும் திரையிடப்பட்டு வருகிறது.

தளபதி ரசிகர்கள் ஆட்டம் போடும் வகையில் ஒரு மாஸ் தகவல் வந்துள்ளது. அதாவது சீனாவில் இந்திய படங்கள் வெளியாவதற்கு ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. பாலிவுட் படங்கள் அங்கு தொடர்ந்து வெளியானாலும் தமிழ் படங்கள் அவ்வளவாக வெளியானதில்லை.

இப்போது என்ன என்றால் விஜய்யின் மெர்சல் படத்தை சீனாவில் உள்ள HGC எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாங்கியுள்ளார்களாம். 2019ம் ஆண்டு Mandarin என்ற மொழியில் டப் செய்யப்பட்டு சீனாவில் வெளியிட இருக்கிறார்களாம்.

என்ன தளபதி பேன்ஸ் இந்த தகவலுக்கு ஒரு ஆட்டம் போடலாமா.