Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் வெற்றி பெற்றும் தயாரிப்பு நிறுவனம் இப்படி ஆகிவிட்டதே- உண்மை நிலவரம் இது தான்

மெர்சல் படத்தின் வசூல் என்பது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல் எனலாம். அந்த அளவிற்கு வசூலை வாரி குவித்தது, இப்படி ஒரு படம் கிடைக்காதா என்று பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர்.

தேனாண்டாள் நிறுவனத்திற்கு ஜாக்பாட் அடித்தது போல் மெர்சல் வெற்றி பெற, திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் லாபம் தான்.

ஏன், தேனாண்டாள் நிறுவனத்திற்கு கடைசி சில வருடங்களில் நல்ல லாபத்தை பெற்று தந்த படம் மெர்சல் தான்.

அப்படியிருந்தும் அவர்களால் அடுத்தப்படத்தை இன்னும் தயாரிக்க முடியவில்லை, இதற்கு முக்கிய காரணம் மெர்சலுக்கு முன் தேனாண்டாள் நிறுவனம் தயாரித்த, வெளியிட்ட அனைத்து படங்களும் படுதோல்வி தானாம்.

அந்த படங்களின் நஷ்டத்தையே மெர்சல் லாபத்தை வைத்து தான் அடைத்தார்களாம், கடைசியில் மெர்சல் மூலம் கடன் அடைந்ததே தவிர, பெரிய லாபம் கையில் நிற்கவில்லை என்று கூறப்படுகின்றது.