Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசத்தால் டுவிட்டரில் நடந்த மாற்றம், இது தான் தல மாஸ்

விஸ்வாசம் அஜித் நடிப்பில் பொங்கல் தினத்திற்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.

அப்படியிருக்க, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது, இவை ரசிகர்கள் தாண்டி நடுநிலை சினிமா ரசிகர்களையும் கொஞ்சம் கவர்ந்துள்ளது.

ஏனெனில் பல வருடம் கழித்து அஜித் சால்ட் & பெப்பர் லுக்கிற்கு டாட்டா காண்பித்துள்ளார், மேலும், இந்தியாவில் பகல் நேரம் அல்லது ஏதாவது படம் அப்டேட் வரும் நேரம் தான் டுவிட்டர் பீக் நேரமாக இருக்கும்.

அந்த நேரத்தில் தான் நிறைய டுவிட்ஸ் வரும், ஆனால், நீண்ட மாதங்களுக்கு பிறகு நடு இரவு 3 மணி முதல் டுவிட்டர் செம்ம பீக்காக இருந்துள்ளதாம்.

இதற்கு காரணம் விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் தானாம், மேலும், விஸ்வாசம் குறித்து 7 லட்சத்திற்கும் அதிகமான டுவிட்ஸ் பதிவாகியுள்ளதாம்.