Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 டீசர் தேதி இது தான், ஷங்கரே கூறிய தகவல்

ஷங்கர் இயக்கத்தில் ஆசியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் 2.0. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.

இந்நிலையில் 2.0 டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர், பலரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரும் என கூறினார்கள்.

ஆனால், சொன்ன தேதியில் இந்த டீசர் வரவில்லை, ஏனெனில் கேரளாவில் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இந்த நேரத்தில் ரஜினி வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நேரத்தில் ஷங்கரை சமீபத்தில் ஒரு கோவிலில் சந்தித்த ரசிகர் ஒருவர், இதுக்குறித்து கேட்க, விநாயகர் சதுர்த்திக்கு 2.0 டீசர் வர முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளாராம்.