Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் இந்த படத்தோட காப்பியா? சிக்கியது ஆதாரம்

காதல் படங்களுக்கும் விட்டு விட்டு பேசும் வசனங்களுக்கும் பேர் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் செக்க சிவந்த வானம்.

சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் என முன்னணி நடிகர்கள் நடித்திருப்பதால் இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் விதமாக இன்று இதன் டிரைலர் வேறு வெளியாகியிருந்தது.

ஆனால் தற்போது இந்த படத்தை பற்றி ஒரு தகவல் டிவிட்டர் போன்றவற்றில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதாவது, டிரைலரில் காண்பிக்கப்பட்ட சில சீன்கள் ஹாலிவுட்டில் மிகப்பெரும் ஹிட்டான காட்ஃபதரை போன்று உள்ளதாம்.

மணிரத்னம் ஏற்கனவே இயக்கியிருந்த நாயகன் படத்திற்கும் இதே கருத்து சொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.