Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ்க்கு என்னதான் ஆச்சு! மறுபடியும் தள்ளி போகியுள்ள வடசென்னை, எப்போ ரிலீஸ் தெரியுமா

தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் வடசென்னை. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் பல வருடங்களாக படப்பிடிப்பில் இருந்தது.

சரி, படப்பிடிப்பு தான் ரொம்ப தாமதம் ஆனது என்று பார்த்தால் ரிலீஸ் செய்வதிலும் தாமதம் ஆகிறது. அதாவது படம் முதலில் சிவகார்த்திகேயனின் சீமராஜாவுக்கு போட்டியாக செப்டம்பர்13 விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்போது விநாயகர் சதுர்த்திக்கெல்லாம் ரிலீஸ் இல்லை, போஸ்ட் புரோக்‌ஷன் பணிகள் உள்ளது, அதனால் படம் அக்டோபர் 17ஆம் தேதி தான் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியோ அன்றைக்காவது ரிலீஸ் செய்யுங்கள், இன்னும் வேலை உள்ளது என ஸ்ட்ரைட்டா தீபாவளிக்கு ரிலீஸை அறிவித்து விடாதீர்கள் என தனுஷ் ரசிகர்கள் குமுறி கொண்டு வருகின்றனர்.