Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

6 புள்ளி வித்தியாசத்தில் விஜய்யை தோற்கடித்த அஜித்- இதுதான் விஷயம்

அஜித்-விஜய் இவர்களின் படங்களுக்கு எப்போதுமே சண்டை இருக்கும். அதைவிட ரசிகர்களுக்குள் நடக்கும் சண்டையை சொல்லவே தேவையில்லை. சமூக வலைதளங்களில் வாய் சண்டை இருக்கும், ஒரு கட்டத்தில் கை சண்டைகள் எல்லாம் நடந்திருக்கிறது, அதெல்லாம் ஒரு காலம்.

இப்போது ரசிகர்களுக்குள் அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கும், விஜய்யின் சர்கார் படத்துக்கும் நிறைய போட்டிகள் நடக்கிறது. தமிழை தாண்டி பாலிவுட் செய்திகளை வெளியிடும் ஒரு ஹிந்தி இணையதளம் எந்த நடிகரின் ஃபஸ்ட் லுக் மிகவும் பிடித்திருக்கிறது என்று விஸ்வாசம், சர்கார் படத்திற்கு கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர். அதில்

  • விஸ்வாசம்- 53%
  • சர்கார்- 47%

வாக்குகள் வந்துள்ளது. இதை வைத்து பார்க்கையில் 6 புள்ளி வித்தியாசத்தில் விஜய்யை தோற்கடித்துள்ளார் அஜித்.