Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் படத்தை எதிர்த்ததால் கன்னட திரைப்பட துறைக்கு இத்தனை லட்சம் அபராதமா?

என்னை அறிந்தால் படம், அஜித் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி கடந்த 2015ல் வெளியானது. கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்‌ஷனை பார்த்த இப்படம் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

ஆனால் கன்னட மொழியில் டப்பிங் செய்து வெளியிட அந்த மாநில திரைப்பட துறை மறுத்துவிட்டது. இதையும் மீறி திரையிடப்பட்டால் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தவும் முடிவு செய்தனர்.

இதனை எதிர்த்து படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சார்பில் மத்திய வர்த்தக அமைச்சகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை இந்திய போட்டி கண்காணிப்பு ஆணையம் விசாரித்தது.

விசாரித்ததில், கன்னட திரைப்பட வர்த்தக சம்மேளனத்திற்கு 12லட்சத்து 60ஆயிர ரூபாய் அபராதமும் வாட்டாள் நாகராஜ்க்கும் கன்னடா ஒக்குட்டா அமைப்பினருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாகவும் செலுத்த ஒரு கட்டளையை இடவுள்ளதாம்.

மேலும் என்னை அறிந்தாலுக்கு பிறகு எடுக்கப்பட்ட விவேகம் படமே அங்கு வெளியிடப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.