Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் 37வது படம் இத்தனை சிறப்பு பெற்றதாம்! படத்தில் பணியாற்றிய பிரபலம் கூறிய தகவல்

சூர்யா தற்சமயம் நடித்து முடிக்கவிருக்கும் படம் NGK. செல்வராகவன் இயக்கிவரும் இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் கொஞ்சம் தள்ளிப்போனது.

இந்நிலையில் சூர்யா, கே.வி.ஆனந்த் இயக்கிவரும் தனது 37வது படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். லண்டனில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றி வருகின்ற பிரபல பாடலாசிரியர் கபிலன் இப்படத்தை பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில், இப்படத்தை கே.வி.ஆனந்த் சார் தனது கனவு படமாக எடுத்து வருகிறார். இதனால் இப்படத்தின் மூலம் சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய treat உள்ளதாம். படத்தில் சூர்யாவுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஆர்யா போன்றோரும் நடித்து வருகின்றனர்.