Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

3 நாட்களில் இவ்வளவு லாபமா? இமைக்கா நொடிகள் பிரமாண்ட சாதனை

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து செம்ம வரவேற்பை பெற்றுள்ள படம் இமைக்கா நொடிகள். இப்படம் தமிழகம் தாண்டி கேரளாவில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

ஆம், கேரளாவில் இமைக்கா நொடிகள் 3 நாட்களில் ரூ 1.8 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இப்படத்தை வாங்கியதே அங்கு ரூ 65 லட்சத்திற்கு தானாம்.

ஆனால், 3 நாட்களில் விநியோகஸ்தர்கள் ஷேர் மட்டும் கேரளாவில் இப்படத்திற்கு ரூ 75 லட்சம் கிடைத்துள்ளதாம், 3 நாட்களிலேயே ரூ 10 லட்சம் லாபம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படியும் இப்படம் கேரளாவில் விநியோகஸ்தர்கள் ஷேர் ரூ 1.2 கோடி வரை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.