Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு படம் இத்தனை மடங்கு லாபம் தருமா? கீதா கோவிந்தம் வசூலில் ஒரு மைல் கல்

விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவின் மாற்றத்திற்கான நடிகர் என்று சொல்லலாம். வேறு எந்த ஒரு நடிகருக்கும் மூன்றே படங்களில் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருக்குமா? என்றால் சந்தேகம் தான்.

இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் கீதா கோவிந்தம். இப்படம் தமிழகத்திலேயே ரூ 5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதுவரை வந்த நேரடி தெலுங்குப்படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்தது இந்த படம் தான்.

மேலும், கீதா கோவிந்தம் உலகம் முழுவதும் ரூ 15 கோடிக்கு படத்தை விற்றுள்ளனர், ஆனால், நிசாம் பகுதியில் மட்டுமே ரூ 15 கோடி ஷேர் வந்துள்ளதாம்.

உலகம் முழுவதும் ரூ 60 கோடி ஷேர் வர, விற்றதை விட 3 மடங்கு அதிக லாபம் 3 வாரத்தில் வந்துள்ளதாம்.