Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட மோஷன் போஸ்டரில் மறைந்திருக்கும் ரகசியங்கள், இதோ

இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து இருந்த ரஜினியின் 165-வது படத்தின் மோஷன் போஸ்டர் வெளிவந்தது. இப்படத்திற்கு பேட்ட என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்ட்ரை கவனிக்கையிலேயே நன்றாக தெரிகின்றது, ரஜினி ஆசிரியராக தான் வருகின்றார் என்று.

மேலும் ஒரு சர்ச்சில் பியானோ இருப்பது போலவும், அதை தொடர்ந்து ஜாமண்ட்ரி பாக்ஸ் பறக்கின்றது, அதில் பென்சில், பேனாக்கள் சிதற, ரஜினி எண்ட்ரீ வருகின்றது.

ரஜினி கொஞ்சம் இளமை கதாபாத்திரமாக இருப்பது போல் வடிவமைத்துள்ளனர், அமைதியான ஆசிரியர், அதை தொடர்ந்து ப்ளாஷ்பேக்கில் பெரிய டான் என்பது போல் தான் படத்தின் கதை இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது.