Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வாரம் எந்த படம் வசூலில் டாப்- இதோ பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த இரண்டு மாதங்களாக வசூல் வேட்டை தான். அதிலும் குறிப்பாக நயன்தாராவின் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் படங்கள் செம்ம வசூலை தந்துள்ளது.

கடந்த வாரம் வெளிவந்த வஞ்சகர் உலகம் எதிர்ப்பார்த்த வசூலை தரவில்லை, அதே நேரத்தில் ஹாலிவுட் படமான தி நன் ரூ 1.4 கோடி வரை சென்னையில் வசூல் செய்துள்ளது.

இது மட்டுமின்றி சென்னை வசூலில் தற்போது வரை இமைக்கா நொடிகள் ரூ 4.10 கோடி வசூல் செய்ய, கோலமாவு கோகிலா ரூ 5.65 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் கடந்த சில வாரங்களாக சென்னை பாக்ஸ் ஆபிஸில் நயன்தாரா ராஜ்ஜியமே உள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது.