Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடிக்கு விலைபோனதா சீமராஜா- வாய் பிளக்கும் மக்கள்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மீண்டும் கூட்டணி அமைத்து நடித்துள்ள படம் சீமராஜா. முதன்முறையாக சிவா-சமந்தாவுடன் ஜோடி சேர்ந்திருப்பது ஒரு ஸ்பெஷல் விஷயம்.

விநாயகர் ஸ்பெஷலாக வெளியாக போகும் இப்படத்தின் பாடல்கள், டயலாக் புரொமோக்கள் தொலைக்காட்சி, சமூக வலைத்தளம் என எல்லா இடத்திலும் பார்க்க முடிகிறது.

தற்போது விஷயம் என்னவென்றால் இப்படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமை மட்டும் ரூ. 36 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி பார்த்தால் இங்கு மட்டும் படம் ரூ. 70 கோடி வசூலித்தால் மட்டுமே சூப்பர் ஹிட்.