Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மெர்சல் சீனாவில் இத்தனை ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகிறதா? பிரமாண்ட சாதனை

விஜய் நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸாகியிருந்த படம் மெர்சல். அட்லீ இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

இந்தியா முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்திருந்த இப்படம் தற்போது அண்டை நாடான சீனாவுக்கு சென்றுள்ளது, அது மட்டுமின்றி முதன்முறையாக சீனாவில் ரிலீஸாகும் தமிழ் படம் என்ற சாதனை படைத்துள்ளது.

வருகிற டிசம்பர்-6ல் ரிலீஸாகவுள்ள இப்படம் சீனாவில் மட்டும் 10000 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்படவுள்ளதாம். அங்கு இருக்கும் 40000 தியேட்டர்களில் விஜய் மெர்சலே 10000 தியேட்டர்களை ஆக்கிரமிக்கவுள்ளது.

இந்த படத்தை அமீர்கானின் டங்கல், சீக்கரட் சூப்பர் ஸ்டார்ஸ் போன்ற படங்களை சீன மொழிக்கு டப்பிங் செய்த நிறுவனத்திடமே கொடுக்க திட்டமிட்டு வருகிறாராம், 'தேனாண்டாள் ஃபிலிம்ஸ்' முரளி.