சீனாவில் பாகுபலி 2 படத்தையே முந்திய விஜய்யின் மெர்சல்- இது சும்மா டிரைலர் தான்

இந்திய சினிமாவையே கலக்கிய ஒரு படம் என்றால் பாகுபலி படம் தான். முதல் பாகம் தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது வரும் என ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆர்வமாக இருந்து பார்த்தனர்.

பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது பெரிய விஷயம் என்றாலும் அதைவிட படம் சீனாவில் திரையிடப்பட்டது. மொத்தம் 6 முதல் 7 ஆயிரம் திரையரங்குகளில் பாகுபலி 2 படம் திரையானது.

இப்போது என்ன விஷயம் என்றால் விஜய்யின் மெர்சல் படம் சீனாவில் வெளியாக இருப்பதாக நாம் ஏற்கெனவே கூறியிருந்தோம். அங்கு படம் மொத்தம் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது, அதாவது பாகுபலி ரிலீஸானதை விட அதிக திரையரங்குகளில் வெளியாகிறது.

ரிலீஸ் திரையரங்குகளில் மாஸ் காட்டும் மெர்சல் வசூலில் என்ன அதிரடி காட்ட போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.