Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 கிளைமேக்ஸ் காட்சிகள் இப்படித்தான் இருக்குமாம், செம்ம தகவல் இதோ

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 2.0. இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே ரூ 540 கோடியை தாண்டியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை பிரமாண்டமாக வர, எல்லோருக்குமே டீசர் எப்படியிருக்கும் என்ற பதட்டம் இருந்து வருகின்றது.

ஏனெனில் பல கோடி செலவு செய்து எடுத்தப்படத்தின் முதல் முன்னோட்டம், ரசிகர்களை எப்படி கவரும் என்பது தான், தற்போது படத்தின் கிளைமேக்ஸ் குறித்து ஒரு சில தகவல்கள் வந்துள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே ஒரு பேட்டியில் இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை பார்த்த போது நானே அதிர்ந்துவிட்டேன் என்று கூறினார், இதுக்குறித்து நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம்.

அதேபோல் தான் சமீபத்தில் வெளியான போஸ்ட்ரை பார்க்கையில் ராட்சஸ கழுகு கிளைமேக்ஸில் வரும், அதை சிட்டி எப்படி கொன்று, மக்களை காப்பாற்றுகின்றது என்பதே கிளைமேக்ஸ் என தெரிகின்றது.

மேலும், இந்த ராட்சஸ கழுகு, ஹாலிவுட் படமான ட்ரான்ஃபார்மர்ஸ் படத்தில் வருவது போல் எலக்ட்ரானிக் வகையாகவும் இருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகின்றது.