Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அர்ஜுன் - ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்? கோலிவுட்டில் பரபரப்பு

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த இரும்புத்திரை ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன். 'கழுகு - 2' படத்திற்கு பிறகு சிங்காரவேலன் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.

அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்க உள்ள இந்த படத்தை 'பேராண்மை' , 'பூலோகம்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.R.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ரதன் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தொகுப்பு - கோபிகிருஷ்ணா.

'க்ரைம் நாவல்' மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுத, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார். இப்படத்தின் ஹீரோ யார் என்பதை விநாயகர் சதுர்த்திக்கு அறிவிக்கவுள்ளார்களாம்.

கண்டிப்பாக அவர் முன்னணி ஹீரோவாக தான் இருப்பார் என்று தற்போதே கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.