Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 டீசர் படைத்த பிரமாண்ட சாதனை, இந்தியளவில் இப்படி ஒரு வரவேற்பா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2.0 டீசர் இன்று வெளிவந்துள்ளது. இந்த டீசர் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.

இந்நிலையில் இந்த டீசர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவந்துள்ளது, இந்த டீசர் வெளிவந்த 4 மணி நேரத்தில் தமிழில் 2.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

அதேபோல் தெலுங்கில் 1.8 மில்லியன், ஹிந்தியில் 1.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதுமட்டுமின்றி தமிழில் 2.4 லட்சம் லைக்ஸுகளும், தெலுங்கு, ஹிந்தியில் 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸுகளையும் பெற்று அசத்தியுள்ளது.