Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆளப்போறான் பாடல் கூட இல்லை, Why this கொலவெறிக்கு 2வது இடத்தில் இந்த பாடல் தான்

அனிருத் இசையில் தனுஷின் 3 படத்தில் இடம்பெற்ற பாடல் தான் why this கொலவெறி. ஆரம்பத்தில் இருந்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வரும் இந்த பாடலை தென்னிந்தியாவில் பாடாத ஆட்களே இல்லை.

நடிகர் தனுஷே பாடியிருந்த இந்த பாடல் தான் யூடியுபில் 16 கோடி பார்வையாளர்களை பெற்று தென்னிந்திய அளவில் முதலிடத்தை வகிக்கிறது.

இதற்கு அடுத்தப்படியாக விஜய்யின் ஆளப்போறான் தமிழன் தான் வரும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் சமந்தா- ராம்சரண் நடித்திருந்த ரங்கஸ்தலம் படத்தின் ரங்கம்மா...மங்கம்மா.... பாடல் 10 கோடி பார்வையாளர்களை பெற்று 2ஆம் இடத்தை தனதாக்கியுள்ளது.

நாட்டுபுறப் பாடலான இதற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.