Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழில் ரஜினியால் கூட செய்ய முடியாத சாதனையை அசால்ட்டாக செய்திருக்கும் அக்‌ஷய்குமார்!

ரஜினியின் நடிப்பில் அடுத்ததாக திரைக்குவர இருக்கும் படம் 2.0. ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் வில்லனாக பிரபல ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார்.

பிரமாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸானது. ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த இந்த டீசர் தமிழில் மட்டும் 1.5 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

ஆனால் இதைவிட இரு மடங்காக அதாவது 3 கோடி பார்வையாளர்களை ஹிந்தி டீசர் பெற்றுள்ளது. இதற்கெல்லாம் ஒரே காரணம், டீசரில் ஒரே ஒரு வினாடி மட்டுமே வந்த அக்‌ஷய்குமார் படத்தில் இருப்பது தான்.

இதனால் படம் வெளியானல் கூட தமிழை விட ஹிந்தியிலேயே அதிக வசூலை குவிக்கும் என நம்பப்படுகிறது. இதன்மூலம் அக்‌ஷய்குமாரே அதிகம் மக்களிடம் ரீச் ஆவதற்கு வாய்ப்பிருக்கிறது.