Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த படம் வீரம்-2வா! அஜித் ரசிகர்கள் கண்டுப்பிடித்த சுவாரஸ்ய தகவலை பாருங்கள்

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் தற்போது விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. அந்த படத்தின் ஷுட்டிங் மும்பை, சென்னை, ஐதராபாத் என பரபரப்பாக நடந்து வருகின்றது.

இந்த நிலையில் இன்று படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது, அதில் அஜித் வெள்ளை சட்டை, வேஷ்டி, வெள்ளை முடி என வீரம் கெட்டப்பில் உள்ளார்.

வீரம் படத்தில் ஒரு காட்சியில் வில்லன் ‘வட இந்தியா பக்கம் போகும் எண்ணம் உள்ளதா?’ என்று கேட்பார்.

அதற்கு அஜித் சிரித்துக்கொண்டே தலை ஆட்டுவார், தற்போது அதேபோல் இந்த கதை மும்பையில் நடப்பதால், ஒருவேளை வீரம் இரண்டாம் பாகம் தான் விஸ்வாசமா? என அஜித் ரசிகர்களே ஒரு கதையை கண்டுப்பிடித்துள்ளனர்.