Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட போல விஸ்வாசம் மோஷன் போஸ்டர் வருகிறதா? இவர்தான் செய்கிறாரா? - வெளியான புதிய தகவல்

அஜித் நடித்து அடுத்து ரிலீஸாக இருக்கும் படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா நான்காவது முறையாக தலயை வைத்து இயக்குகின்ற படம் இது.

நீண்ட நாள் படப்பிடிப்பில் இருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் வேலை நடப்பதாக படத்தில் vfx ஆர்டிஸ்ட்டாக உள்ள ரமேஷ் என்பவர் கூறியுள்ளார்.

மேலும் அவர், படக்குழுவினரிடம் இருந்து சில போட்டோக்கள் வந்துள்ளன. அதை வைத்து மோஷன் போஸ்டரை தயாரிக்கும் பணியில் நான் தற்போது முழுவீச்சாக உள்ளேன்.

ஃபர்ஸ்ட்லுக்கை போன்று மோஷன் போஸ்டரிலும் தல அஜித் இரட்டை வேடங்களிலே காண்பிக்கப்படுகிறார் என்றார். இவர் தான் ரஜினியின் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டரை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வாசம் பட மோஷன் போஸ்டரும் பேட்டயை போன்று 3Dயில் தான் உருவாக உள்ளதாம்.