Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழகத்தில் கீதா கோவிந்தம் மட்டும் படைத்த வசூல் சாதனை, வேறு எந்த தெலுங்குப்படமும் இல்லை

விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் கீதா கோவிந்தம். இப்படம் உலகம் முழுவதும் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். இந்நிலையில் இப்படம் டப் கூட செய்யாமல் நேரடி தெலுங்குப்படமாக தமிழகத்தில் ரிலிஸாகியது.

தமிழகத்தில் இப்படம் தெலுங்கிலேயே ரூ 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இதற்கு முன் வேறு எந்த நேரடி தெலுங்குப்படமும் இத்தனை கோடிகளை வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து விஜய் தேவரகொண்டா நடிக்கும் நோட்டா வரும் அக்டோபர் 5ம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வருகின்றது.