Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல மாதங்களாக கஷ்டப்பட்டு மெர்சல் செய்த சாதனையை 3 நாளில் உடைத்து எறிந்த பிரியா வாரியர்

விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் மெர்சல். தெறிக்கு பின் அட்லீ இயக்கியிருந்த இந்த படம் தளபதி ரசிகர்களையும் தாண்டி பலருக்கும் பிடித்திருந்தது.

படம் ரிலீஸாகி ஒரு வருடம் ஆன நிலையிலும் பல சாதனைகளை தற்போது வரை நிகழ்த்தி கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதில் ஒரு சாதனையை கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியரின் ஒரு அடார் லவ் படம் முறியடித்துள்ளது.

மளையாள படமான இது இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளதால் மக்கள் மறந்துவிட கூடாது என்பதற்காக கடந்த 20 தேதி Freak Penne என்ற பாடலை வெளியிட்டு இருந்தனர்.

பாடல் ரிலீஸாகி 3 நாட்கள் தான் ஆனாலும் இந்தியாவில் அதிகம் வெறுக்கப்பட்ட யூடியுப் வீடியோவான மெர்சலின் டீசரை முறியடித்துள்ளது. 230K டிஸ்லைக் வாங்கியிருந்த மெர்சலின் டீசரை 300K பெற்று முந்தியுள்ளது.

இதுவும் படத்தை ப்ரோமோட் செய்வதற்கான ஒரு வழி என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.