Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னதான் 500 கோடி படம் என்றாலும் மெர்சலின் இந்த சின்ன சாதனையை கூட முறியடிக்க திணறும் 2.0!

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் படங்களில் 2.0வும் ஒன்று. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் எமி ஜாக்சன், அக்சய்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

நவம்பர் 29ல் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த விநாயகர் சதுர்த்திக்கு வெளியிடப்பட்டது. வெளியான ஒரு மணிநேரத்திலேயே யூடியுப்பில் 1 லட்சம் லைக்குகளை கடந்திருந்தது.

ஆனால் தற்போது வரை 5 லட்சம் லைக்குகளே வந்துள்ளன. யூடியுப்பில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தும் என கருதப்பட்ட இந்த டீசர் விஜய்யின் மெர்சலின் 10 லட்ச லைக்குகள் சாதனையை கூட முறியடைக்கவில்லை.

இதன் இந்தி டீசர் கூட இப்போது தான் 8 லட்சம் லைக்குகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.