சர்கார் ஆடியோ லாஞ்ச்சை விடுங்க! தல அஜித்தின் விஸ்வாசத்தின் இசை வெளியீட்டுக்கு ரெடியாம்
திரைப்படம் by Vicky
அஜித் நடிப்பில் தற்சமயம் உருவாகிவரும் படம் விஸ்வாசம். நாலாவது முறையாக சிறுத்தை சிவா தலயை வைத்து இயக்கும் படம். பல மாதங்களாக எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் இருந்த இதன் ஃபர்ஸ்ட்லுக் சில வாரங்களுக்கு முன் வெளியானது.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் இசையின் வேலை முழுவதையும் இசையமைப்பாளர் டி.இமான் முடிந்துவிட்டாராம். இதனை படத்தின் பாடலாசிரியர்களில் ஒருவரான அருண் பாரதி தெரிவித்துள்ளார்.
இதனால் இதன் அப்டேட் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் தல ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஸ்வாசம் பாடல்கள் அனைத்தும் இமான் சார் இசையில் சிறப்பாக முடிந்து விட்டது. https://t.co/ZMkAHUmIj1
— Arun Bharathi Lyricist (@ArunbharathiA) September 23, 2018