Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் எங்கள் கௌரவம், ரசிகர்களை குஷிப்படுத்திய நிகழ்வு

மெர்சல் தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம். இப்படத்தின் மீது நிறைய சர்ச்சைகள் இருந்தது.

ஆனால், இதுவே படத்தின் மிகப்பெரும் வெற்றிக்கு காரணமானது, இந்நிலையில் மெர்சல் படத்திற்காக சிறந்த நடிகர் என்ற விருதை விஜய் பெற்றுள்ளார்.

அதுவும் சர்வதேச அளவில் நடந்த ஒரு விருது விழாவில், இதற்காக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

மேலும், தேனாண்டாள் நிறுவனம் விஜய்க்கு வாழ்த்து சொன்ன பல மொழி பத்திரிகைகளை ஷேர் செய்து மெர்சல் எங்கள் கௌரவம், தளபதி விஜய்க்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளனர்.