Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சண்டக்கோழி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர்தானாம்- விஷாலே வெளியிட்டுட்டாரு

நடிகர் விஷால் ஒரு நடிகராக இல்லாமல் சினிமா துறையில் சில முக்கிய பதவியில் இருந்து வருகிறார். படங்களிலும் கமிட்டாகி பிஸியாக நடிக்கிறார். அடுத்து இவரது நடிப்பில் சண்டக்கோழி 2 படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

நேற்று (செப்டம்பர் 24) படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.

இதில் விஷால் பேசும்போது, முதலில் சண்டக்கோழி பட கதை எனக்காக எழுதினது இல்லை, சூர்யாவுக்காக எழுதப்பட்டது. எதற்சையாக இப்பட கதையை நான் படிக்க பிடித்துபோய் லிங்குசாமியிடம் இதில் நான் நடிக்கலாமா என்று கேட்டேன். அவர் யோசித்து பின் ஒப்புக் கொண்டார். சண்டக்கோழி ஆக்ஷன் ஹீரோ என்று இமேஜை கொடுத்தது, ஆந்திராவிலும் வலம் வர உதவியது.

இது என்னுடைய 25வது படம், தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் அக்டோபர் 18ம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் பேசியுள்ளார்.