Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Simtaangaran விஜய் ரசிகர்களே சோகமாக்கிய தருணம், பாடல் குறித்து அவர்கள் சொல்லு கருத்து இது தான்

Simtaangaran தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் சிங்கிள் ட்ராக். ரசிகர்கள் அனைவரும் ஆளப்போறான் தமிழன் போல் இருக்கும் என ஆர்வமுடன் இருந்தனர்.

ஆனால், யாருக்குமே புரியாத வார்த்தைகளை போட்டு ரசிகர்களையே கொஞ்சம் தடுமாற வைத்தது Simtaangaran.

இது ரகுமான் பாட்டு தானா? இல்லை தேவா பாடலா? என்று கேட்கும் அளவிற்கு இருந்தது, இன்னும் சிலர் ரகுமான் இசை நன்றாக தான் இருந்தது.

விவேக் எழுதிய வரிகள் தான் ஒன்றுமே புரியவில்லை, ஏன் இப்படி எழுதினார் என்று கூறி வந்தனர், இன்னும் ஒரு சிலர் இது விஜய்க்கான பாடலே இல்லை என்று தெரிவித்தனர்.

அதே நேரத்தில் வழக்கம் போல் ஒரு கும்பல் இது ரகுமான் பாடல் ஒரு தடவை கேட்டால் பிடிக்காது, கேட்க கேட்க தான் பிடிக்கும் என்று ஆறுதல் சொல்ல ஆரம்பித்தது.

எது எப்படியோ Simtaangaran விஜய் ரசிகர்களை பொறுத்தவரை கொஞ்சம் ஏமாற்றமாகவே தான் அமைந்துள்ளது.