Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாமி-2 ஐந்து நாள் மொத்த வசூல், எதிர்ப்பார்த்ததை தாண்டியதா?

விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் சாமி-2 படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களால் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் முதல் மூன்று நாட்களில் இப்படம் தமிழகத்தில் ரூ 16 கோடி வரை வசூல் செய்தது, சென்னையில் ரூ 1.9 கோடி வரை வசூல் செய்திருந்தது.

தற்போது 5 நாள் முடிவில் இப்படம் தமிழகத்தில் ரூ 20 கோடியை தாண்டிவிட்டதாகவும், சென்னையில் ரூ 2.3 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உலகம் முழுவதும் சாமி எப்படியும் ரூ 35 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டுகின்றது.

இந்த வசூல் எதிர்ப்பார்த்ததை விட கொஞ்சம் குறைவு தான் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.