Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செக்கச்சிவந்த வானம் படம் இந்த கொரியன் படத்தின் காப்பியா? அதிர்ச்சி தகவல்

செக்கச்சிவந்த வானம் படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை தான் பெற்றுள்ளது.

இந்நிலையில் செக்கச்சிவந்த வானம் கொரியன் படமான நியூ வேல்ட் என்ற படத்தின் காப்பி என்று கூறப்படுகின்றது.

நியூ வேல்ட் பொறுத்தவரை ஒரு பெரிய நிறுவனத்தில் நிறுவனரை முதல் காட்சியிலேயே லாரி வைத்து இடித்து கொல்கின்றனர்.

அதை தொடர்ந்து அந்த இடத்திற்கு 3 பேர் அடித்துக்கொள்கின்றனர், அதில் ஒருவர் போலிஸ், இதை தொடர்ந்து கிளைமேக்ஸில் அந்த இடத்தை யார் பிடிப்பது என்பது தான் கதை.

செக்கச்சிவந்த வானமும் நியூ வேல்டும் சற்று ஒரே மாதிரி இருந்தாலும், செக்கச்சிவந்த வானம் குடும்பத்திற்குள் நடக்கும் போட்டி என்பது போல் தான் காட்டியுள்ளனர்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இதே கதைக்களத்தில் பல படங்கள் தமிழிலேயே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.