Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதெல்லாம் வெறும் கட்டுக்கதை: 2.0 வதந்தி பற்றி ஷங்கர் விளக்கம்

ரஜினி நடித்து வரும் 2.0 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தை வருகிற நவம்பர் 29ஆம் தேதிக்கு ரிலீஸ் செய்ய படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதெல்லாம் தெரிந்த விஷயம் தான், ஆனால் தெரியாத விஷயமாக படத்தில் ரஜினிக்கு 5 கெட்டப், வில்லன் அக்ஷய்குமாருக்கு ரிச்சர்ட் என்ற விஞ்ஞானி வேடம், துரதிர்ஷ்டவசமாக அவர் பரிசோதனையின் போது வில்லனாக மாறுவார், அவருக்கு 12 கெட்டப் என்ற தகவல் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி கொண்டிருக்கிறது.

ஆனால் இதெல்லாம் வெறும் கட்டுக்கதை, இதில் துளி கூட உண்மை இல்லை என்று ஷங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி சிரித்துள்ளார். ரஜினியை விட அக்சய்குமாருக்கு பரவும் வதந்திகள் கற்பனைக்கே எட்டாத வகையில் உள்ளது என்றார்.