Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

6 நாட்களில் இத்தனை கோடி வசூலை தாண்டியதா செக்கச்சிவந்த வானம், இந்த வருடத்தின் பெஸ்ட்

செக்கச்சிவந்த வானம் இது உண்மையாகவே மணிரத்னம் படம் தானா என்பதே அனைவரின் கேள்வியும். ஏனெனில் படமாகவும் சரி, அதற்கு வந்த வசூலும் வேற லெவலில் உள்ளது.

இந்நிலையில் செக்கச்சிவந்த வானம் வெளிவந்து 6 நாட்கள் ஆகிய நிலையில் இப்படம் உலகம் முழுவதும் சுமார் 70 கோடி ரூபாய் வரை வசூல் வந்துள்ளது என கூறப்படுகின்றது.

இதில் தமிழகத்தில் மட்டுமே வசூல் ரூ 35 கோடி வந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும், ஓவர்சீஸில் இப்படம் ரூ 25 கோடி வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

எப்படி பார்த்தாலும் இந்த வருடத்தில் கடைக்குட்டி சிங்கத்திற்கு பிறகு அனைத்து தரப்பினருக்கும் மிகப்பெரும் லாபம் தந்த படமாக இது அமைந்துள்ளது.