Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நோட்டா படத்தை ரிலிஸ் செய்யக்கூடாது என்று புகார், காரணத்தை கேட்டால் நீங்களே சிரித்துவிடுவீர்கள்

நோட்டா விஜய் தேவரகொண்டா தமிழில் முதன் முறையாக நாயகனாக அறிமுகமாகும் படம். இப்படத்தின் மீது செம்ம எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் நோட்டா படத்தை தெலுங்கில் வெளியிடக்கூடாது என்று முன்னாள் தணிக்கை குழுவை சேர்ந்த ஜெகதீஸ்வர் ரெட்டி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

என்ன என்று பார்க்கையில் அவர் கூறும் விளக்கம் சிரிப்பை தான் வர வைக்கின்றது, அது என்னவென்றால் ‘விரைவில் தெலுங்கானாவில் தேர்தல் வரவுள்ளது.

இந்த படத்தை பார்த்தால் மக்கள் அனைவரும் நோட்டாவிற்கு தான் வாக்களிக்க விரும்புவார்கள், இந்த படம் ஒரு தவறான முன் உதாரணம் ஆகிவிடும்’ என்று அவர் கூறியுள்ளார்.