Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராக்கு பிறகு அறம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க போவது இந்த பிரபல நடிகை தானாம்!

நயன்தாரா நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்த படம் அறம். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கோபி நாயனார் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஹீரோவாக ஜெய் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நடிக்க உள்ளாராம். இந்த தகவலை தற்போது தான் படக்குழு அறிவித்துள்ளது.

வடசென்னையில் பாக்ஸிங் கலாச்சாரத்தை மையமாக வைத்து உருவாகவுள்ள இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஈஸ்வரும் இசையமைப்பாளராக பிராசத்தும் சேர்க்கப்பட்டுள்ளனர்.