Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் பேட்டயில் இணைந்த மற்றொரு முன்னணி நடிகர்! ஒரே படத்தில் இத்தனை பிரபலங்களா

ரஜினி தற்சமயம் பிசியாக பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை வாரணாசி உள்ளிட்ட வட மாநிலங்களில் மும்முரமாக நடத்தி கொண்டிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

இந்நிலையில் தமக்கு வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் புதியதாக நடிகர் சசிகுமார் இணைந்துள்ளார். ஏற்கனவே படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ஜோக்கர் சோம சுந்தரம் என முக்கிய பிரபலங்கள் இருக்கும் நிலையில் இவரும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

படத்தில் சசிகுமார், ரஜினியின் பிளாஸ்பேக் நண்பராக நடிக்கிறாராம். தற்போது இந்த காட்சியின் படப்பிடிப்பிற்காக இவரும் ரஜினியுடன் வாரணாசியில் தான் உள்ளாராம்.