Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டு நாளில் நோட்டா இத்தனை கோடி வசூலா, வேற லெவல் விஜய்

தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நாயகன் என்றால் தற்போது விஜய் தேவரகொண்டா தான். இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் வரிசை தான்.

அதிலும் குறிப்பாக கீதா கோவிந்தம் ரூ 125 கோடி வசூலை தாண்டியது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த வாரம் நோட்டா படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் சந்தித்து வருகின்றது.

அப்படியிருந்தும் உலகம் முழுவதும் 2 நாட்களில் இப்படம் ரூ 25 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

எப்படியும் படம் முதல் வாரத்திலேயே ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.