Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செக்கச்சிவந்த வானம் இத்தனை கோடி வசூலா! அதிர வைத்த பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த்சாமி நடிப்பில் சமீபத்தில் செக்கச்சிவந்த வானம் படம் திரைக்கு வந்தது. இப்படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தான் இந்த வருடத்தின் சென்சேஷன், ஏனெனில் மணிரத்னம் படம் என்றாலே விமர்சனம் நன்றாக வரும் பாக்ஸ் ஆபிஸில் பெரிதும் செல்லாது என்பார்கள்.

ஆனால், இப்படம் தமிழகத்திலேயே ரூ 44 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, உலகம் முழுவதும் ரூ 85 கோடி வரை இப்படம் வசூல் செய்துவிட்டதாம்.

இப்படம் ரூ 100 கோடி வசூலை தொட்டால் மணிரத்னம் இயக்கத்தில் முதல் ரூ 100 கோடி படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.