Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலாவிற்கு அடுத்து செக்கச்சிவந்த வானம் தான், வசூல் சாதனை

சிம்பு படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வரமாட்டார் என்பார்கள். ஆனால், தற்போது பல படங்களில் நடித்து அடுத்தடுத்து ரிலிஸிற்கு ரெடியாகி வருகின்றார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த செக்கச்சிவந்த வானம் படம் சென்னையில் மட்டுமே ரூ 7 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.

இதன் மூலம் இந்த வருடம் சென்னையில் காலாவிற்கு அடுத்து அதிக வசூல் செக்கச்சிவந்த வானம் தான்.

மேலும், இப்படம் தமிழகம் முழுவதும் ரூ 45 கோடிகள் வரை வசூல் செய்துவிட்டது, காலா ரூ 60 கோடி, கடைக்குட்டி சிங்கம் ரூ 50 கோடி முறையே வசூல் செய்துள்ளது.

காலா வசூலை முறியடிக்குமா என்று தெரியவில்லை, ஆனால், செக்கச்சிவந்த வானம் கண்டிப்பாக கடைக்குட்டி வசூலை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.