Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் சர்கார் படத்துக்கு ஏற்பட்ட பெரிய பிரச்சனை- மறுபடியும் இப்படியா?

தமிழில் ராட்சசன், 96 போன்ற படங்கள் கதையால் ஜெயித்து வெற்றிநடைபோட்டு வருகிறது. அடுத்து நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் தனுஷ் நடித்துள்ள வட சென்னை படம் வெளியாக இருக்கிறது.

இப்படங்களை தாண்டி பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் என்றால் விஜய்யின் சர்கார் படம் தான்.

தீபாவளிக்கு படம் கன்பார்ம் என்பது தெரியும் ஆனால் தேதி இன்னும் சரியாக தெரியவில்லை. இதற்கு நடுவில் வருண் தேவராஜ் என்பவர் சர்கார் படத்தின் கதை என்னுடையது என்று புகார் கொடுக்க அந்த விவகாரம் இப்போது சூடு பிடித்துள்ளது.

அதாவது இரு பட கதைகளை வைத்து பார்க்கையில் இரண்டுமே 100% ஒன்றாக இருக்கிறதாம். இதனால் பிரச்சனை பெரிதாக வாய்ப்பிருப்பதாக திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.