Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம், சர்கார் கதையை அப்படியே சொல்லிய முருகதாஸ்

முருகதாஸ் தமிழ் சினிமா தாண்டி பாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றி பெற்ற இயக்குனர். இவர் இயக்கத்தில் சர்கார் படம் இந்த தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி என பலரும் நடித்துள்ளனர், இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த கதை எப்படி உருவானது என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ’ஒரு நாள் நான் மக்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, ஒருவர் “என்னோட ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம்ங்க” என்று சொல்ல அவை எனக்கு அதிர்ச்சியை தந்தது.

காசுக்காக வாக்கை விற்று தவறான ஆட்களை தேர்ந்தெடுத்துவிட்டு பிறகு அரசங்காத்தை திட்டுவது எப்படி நியாயம்.

தவறு நம் மீதும் உள்ளது, நாம் நம்மை சரி செய்ய வேண்டும், என்று தோன்றியது, அதிலிருந்து உருவானதே சர்கார்’ என்று முருகதாஸ் கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் சுந்தர்பிச்சை கதாபாத்திரம் தான் விஜய் நடித்துள்ளாராம்.