Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இங்குள்ளவர்களுக்கு இல்லை, கேரள தளபதி ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் செம ட்ரீட்!

விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் டீசர் நாளை ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பு மத்தியில் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது.

இதனால் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம் தான் தற்சமயம் எங்கு பார்த்தாலும் உள்ளது. ஆனால் இந்த கொண்டாட்டம் இங்குள்ளவர்களை விட கேரள ரசிகர்களுக்கு தான் அதிகமாக இருக்கும்.

ஏனென்றால் சர்கார் பட டீசர் நாளை கோழிக்கோட்டில் உள்ள பீச்சில் நேரலையாக காட்டப்பட உள்ளதாம். அது மட்டுமில்லாமல் இன்று நள்ளிரவு 11.59 மணிக்கு கேரள ரசிகர்களுக்காக சர்கார் படத்தின் மேலும் ஒரு போஸ்டர் வெளியிடப்பட உள்ளதாம்.

எப்படியோ நாளையை விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட போகிறார்கள் என்பது மட்டும் உறுதி.